மந்திரவாதிகள் திருவிழா
போலந்து நாட்டில் மந்திரவாதிகளின் திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
போலந்து நாட்டில் உள்ள ‘சோஷோவா’ அரண்மனை, வருடத்திற்கு நான்கு நாட்கள் மந்திரவாதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது. ‘விஸாட்ரி பெஸ்டீவெல்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த மந்திரவாதிகளின் திருவிழாவில், கைதேர்ந்த மந்திர வாதிகளும், மாயாஜால கல்லூரிகளில் பயில்பவர்களும் தவறாமல் கலந்து கொள் கிறார்கள். அதனால் மந்திரவாதிகளின் திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்தத் திருவிழாவின் போது அரண்மனையின் நுழைவுவாயில் வீரர்கள் தொடங்கி, மந்திரவாதிகளின் தலைவன் வரை அனைவருமே வித்தியாசமான உடைகளில் உலா வருகிறார்கள். குறிப்பாக ஹாரிபாட்டர் திரைப்படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும், இந்த மந்திரவாதிகளின் திருவிழாவில் காணமுடியும். மந்திரக் கோல், மாயாஜால தொப்பி, மந்திர குடுவைகள், திடீரென அணைந்து எரியும் மந்திர விளக்குகள் என அரண்மனையே, மாயாஜால உலகமாக காட்சியளிக்கிறது. இந்தத் திருவிழாவில் விதவிதமான மாயாஜால வித்தைகள் செய்து காண்பிக்கப் படுவதுடன், மந்திர வித்தைகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
Related Tags :
Next Story