நெல்லையில் இருந்து ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் கர்நாடகா கொண்டு செல்லப்பட்டன


நெல்லையில் இருந்து ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் கர்நாடகா கொண்டு செல்லப்பட்டன
x
தினத்தந்தி 22 Feb 2018 9:00 PM GMT (Updated: 22 Feb 2018 3:43 PM GMT)

நெல்லையில் இருந்து கர்நாடகாவுக்கு 177 ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

நெல்லை,

நெல்லையில் இருந்து கர்நாடகாவுக்கு 177 ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

கட்டுப்பாட்டு எந்திரங்கள்

கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற மே மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் தொடங்கி விட்டது. அதாவது கர்நாடகாவில் ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டு எந்திரங்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களை கர்நாடகா மாநிலத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகாவுக்கு சென்றன

இதையொட்டி கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 6 பேர் நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்தனர். அவர்களுடன் பாதுகாப்பு பணிக்கு அந்த மாநில போலீசாரும் வந்திருந்தனர். அவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களை கர்நாடகாவுக்கு கொண்டு செல்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) விஜயகுமார், நெல்லை தாசில்தார் கணேசன் ஆகியோர் கர்நாடகா அதிகாரிகளை நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள குடோனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த 177 ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களின் வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் அவற்றை 17 பெட்டிக்குள் வைத்து ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றனர். இந்த எந்திரங்கள் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் தூத்துக்குடி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் எந்திரங்களை எடுத்துச்செல்வதாக அதிகாரிகள் கூறினர்.

Next Story