மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2018 4:00 AM IST (Updated: 23 Feb 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட சமூக நீதி பாதுகாப்பு பேரவை(அனைத்து மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு) சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட சமூக நீதி பாதுகாப்பு பேரவை(அனைத்து மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு) சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ‘நீட்‘ நுழைவு தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு குமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் மணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் வெற்றிவேந்தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story