கும்பகோணம் அருகே சிவன் கோவில் கருவறையில் தீ விபத்து
கும்பகோணம் அருகே சிவன் கோவில் கருவறையில் நடந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில், திருப்பனந்தாள் மடத்திற்கு சொந்தமானதாகும். நேற்று கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி கோவிலில் அர்ச்சகர் சுந்தரேசன் சிறப்பு பூஜைகளை செய்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் பகல் 12 மணி அளவில் கோவில் கருவறையில் இருந்து புகை வந்து கொண்டிருந்ததை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்தனர். இதையடுத்து கருவறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின்பேரில் கும்பகோணம் தீயணைப்பு படைவீரர்கள் நிலைய அலுவலர் முத்துகுமார் தலைமையில் கோவிலுக்கு விரைந்து வந்து பக்தர்களுடன் சேர்ந்து கருவறைக்குள் பற்றிய தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து கோவிலின் அர்ச்சகர் சுந்தரேசன் கூறியதாவது:- பூஜையின்போது மூலவர் சன்னதியில் விளக்கு ஏற்றப்பட்டது. இந்த விளக்கில் இருந்து தீ பரவி சாமிக்கு அணிவிக்கப்படும் துணிகளில் பற்றி உள்ளது. அதன் பின்னர் தீ மள, மளவென பரவி பீரோவில் இருந்த பட்டு சேலைகள், வேட்டிகள், சாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள், பூஜை பொருட்கள், மின் சாதனங்கள் தீயில் கருகி உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. இதுகுறித்து திருப்பனந்தாள் மடத்தின் கணக்கர் மஞ்சமுனி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் அடுத்தடுத்து தீ விபத்துகள் நடந்து வருகின்றன. கடந்த 13-ந் தேதி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி அன்று தீ விபத்து நடந்தது. இந்த நிலையில் கும்பகோணம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story