மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழா: பயனாளிகளுக்கு ரூ.6¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
தேவாமங்கலம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு ரூ.6¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், தேவாமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழா மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தன சேகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் வருவாய்த்துறையின் சார்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்களுக்கான ஆணை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை, வேளாண்மை துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3,355 மதிப்பிலான விசைதெளிப்பான், தென்னங்கன்று, வேளாண் இடுபொருட்கள், தோட்டக்கலை துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.69 ஆயிரத்து 400 மதிப்பில் மழைத்தூவான், இன கவர்ச்சி பொறி, மஞ்சள் வண்ண அட்டைகள் என மொத்தம் 80 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 72 ஆயிரத்து 755 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
விழாவில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், நலத்திட்டங்கள் வழங்குவதற்காகவும் மக்களை தேடி, அரசு அலுவலர்கள் வருகை புரிந்து, ஒவ்வொரு மாதமும் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு முகாமும், மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஒரு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் பணி பளுவை குறைத்திடும் வகையில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு பெறப்படும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சரியான முறையில் கோரிக்கைகள் இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்துத்துறை அலுவலர் களுக்கும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.
எனவே, இதுபோன்று நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களின் தேவைக்கேற்ப அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் கதிரேசன், துணை இயக்குனர் (சுகாதார துறை) ஹேமசந்த்காந்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முடநீக்கியியல் வல்லுநர் ராமன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் வேல்முருகன், ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, தாட்கோ, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயங்கொண்டம் வட்ட வழங்கல் அலுவலர் சம்பத் வரவேற்றார். முடிவில் மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தவேல் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story