தண்ணீரை விலைக்கு வாங்கி நெற்பயிருக்கு பாய்ச்சும் விவசாயிகள்
தேனி அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் நெற்பயிரை காப்பாற்றுவதற்காக டிராக்டரில் தண்ணீரை விலைக்கு வாங்கி வயலுக்கு விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.
தேனி,
தேனி, உத்தமபாளையம் தாலுகாவில் சுமார் 468 ஏக்கர் நன்செய் நிலங்கள், 4 ஆயிரத்து 678 ஏக்கர் புன்செய் நிலங்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் உத்தமபாளையம் அருகே வாக்கால்பட்டியில் தந்தைபெரியார் மற்றும் பி.டி.ஆர். கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாய்க்கு ஆண்டு தோறும் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்ற அறிவிப்போடு தண்ணீர் திறக்கப்பட்டது. இதை நம்பி, சின்ன மனூர், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை, பூமலைக்குண்டு, வெங்கடாசலபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் விவசாய பணிகள் தொடங்கின.
இதில் வெங்கடாசலபுரம் கிராம பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், தற்போது பால் பிடிக்கும் நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்கள் தண்ணீர் கிடைத்தால் கூட பயிர் விளைச்சல் அடைந்து விடும்.
ஆனால், வடகிழக்கு பருவமழை போதிய அளவில் கைகொடுக்கவில்லை என்றும், முல்லைப்பெரியாறு அணையில் போதிய நீர் இருப்பு இல்லை என்றும் கூறி தந்தைபெரியார் மற்றும் பி.டி.ஆர். கால்வாய்க்கு போதிய அளவில் தண்ணீர் திறக்கப்படவில்லை. பயிர் விளைச்சல் அடையும் நேரத்தில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கருகும் அபாயம் உள்ளது.
இதனால், விவசாயிகள் சிலர் தங்களின் பயிர்களை காப்பாற்ற லாரி, டிராக்டர்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி வயலுக்கு பாய்ச்சும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வெங்கடாசலபுரத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. கால்வாய் தூர்வாரப்படாமல் கிடப்பதால், அதில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக கண்மாய்களுக்கும் வந்து சேரவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு மழைப் பொழிவும் இல்லை. பயிர் விளைச்சல் அடையும் நேரத்தில் தண்ணீர் இல்லாமல் போனதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தனை நாட்களாய் வளர்த்த பயிர்களை கருகி விடாமல் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக லாரி, டிராக்டர்களில் தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். ஒரு டிராக்டர் தண்ணீர் ரூ.600 முதல் ரூ.700 வரை சொல்கிறார்கள். இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, கருகும் பயிர்களை காப்பாற்ற கால்வாயில் போதிய தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என்றனர்.

Related Tags :
Next Story