ஆந்திராவில், சேலம் தொழிலாளர்கள் 5 பேர் மர்ம சாவு: சி.பி.ஐ. விசாரணை கோரி மாணவர்கள் சாலை மறியல்
ஆந்திராவில், சேலம் தொழிலாளர்கள் 5 பேர் மர்மமான முறையில் இறந்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள பெரியகல்வராயன் மலை கிராமமான கிராங்காடு பகுதியை சேர்ந்த சி.முருகேசன், ஜெயராஜ், ஏ.முருகேசன், கருப்பண்ணன், சின்னபையன் ஆகிய 5 தொழிலாளர்கள் கடந்த 18-ந் தேதி ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து அவர்களுடைய உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சேலம் தொழிலாளர்கள் 5 பேர் சாவுக்கு நீதி கேட்டும், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உண்மை தன்மையை வெளியே கொண்டு வரவேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் நேற்று வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட மாணவர் பேரவை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
இதையடுத்து திடீரென மாணவ, மாணவிகள் சாலைக்கு வந்து அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ‘நீதி வேண்டும் தமிழக அரசே நீதி வேண்டும்‘, ‘மத்திய அரசே சி.பி.ஐ.க்கு உத்தரவிடு‘ என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியலினால் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, ‘ஆந்திராவில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 5 பேர் மர்மமான முறையில் இறந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி நாங்கள் இன்று(நேற்று) வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகிறோம். இதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். எங்களுடைய கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நடைபெறும்‘ என்றனர்.

Related Tags :
Next Story