நீட் தேர்விற்கு எதிராக சமூக நீதி பாதுகாப்புக்கான பேரவையினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்விற்கு எதிராக சமூக நீதி பாதுகாப்புக்கான பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2018 4:15 AM IST (Updated: 23 Feb 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்விற்கு எதிராக சமூக நீதி பாதுகாப்புக்கான பேரவை சார்பில் கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், சமூக நீதி பாதுகாப்புக்கான பேரவை (அனைத்து கட்சி மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு) சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் தலைமை தாங்கினார்.

மேற்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் சத்யா, துணை அமைப்பாளர் மகேந்திரன், திராவிடர் கழக மாணவர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார், மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், சமூக நீதி இயக்க பொறுப்பாளர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன கோஷங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் திராவிடமணி கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன் கண்டனவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நீட் தேர்விற்கு எதிராகவும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story