உசிலம்பட்டியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
உசிலம்பட்டியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சோலைரவிக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் எஸ்.ஓ.ஆர் தங்கப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் உக்கிரபாண்டி, மூக்கையா, மாவட்ட அவைத்தலைவர் அன்புமாறன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்லம்பட்டி முத்துராமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க மதுரைக்கு வருகைதரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்தும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய பி.மூர்த்தி எம்.எல்.ஏ. தமிழகத்தில் பா.ஜ.க.வின் கொத்தடிமை ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். செயல்வீரர்கள் தேர்தல் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
தற்போது இங்கு நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் தான் மாவட்டத்திலேயே சிறப்பான கூட்டம். உங்களுடைய எழுச்சியை பார்த்தால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புக்கள் அதிக அளவில் உள்ளது என பேசினார். முடிவில் ஒன்றிய பிரதிநிதி ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
சேடபட்டி ஒன்றியம் அத்திபட்டியில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சேடபட்டி ஒன்றியம் மூக்கையா, எஸ்.ஓ.ஆர் தங்கப்பாண்டி உள்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story