ஏர்செல் அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை
செல்போன் சேவை முடங்கியதால் ஏர்செல் அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு,
தமிழகம் முழுவதும் ஏர்செல் செல்போன் சேவை கடந்த சில நாட்களாக திடீரென முடக்கப்பட்டதால் அதன் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே ஏர்செல் அலுவலகத்திற்கு வாடிக்கையாளர்கள் சென்று குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு மேட்டூர்ரோட்டில் உள்ள ஏர்செல் அலுவலகம் நேற்று அடைக்கப்பட்டு இருந்தது இதனால் அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அலுவலகத்தின் முன்பு முற்றுகையிட்டனர். இதையடுத்து மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வாடிக்கையாளர்கள் கூறும்போது, “ஏர்செல் நிறுவனம் தனது சேவையை உடனடியாக நிறுத்தி உள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இதுதொடர்பாக புகார் தெரிவிக்க வந்தால் அலுவலகமும் அடைக்கப்பட்டு உள்ளது.
எனவே எங்களுக்கு உரிய விளக்கம் கிடைக்காமல் தவிக்கிறோம்”, என்றனர். அதற்கு போலீசார், “தமிழகம் முழுவதும் பிரச்சினை உள்ளது. எனவே உங்களுடைய புகாரை ஏர்செல் நிறுவனத்திற்கு அனுப்பி வையுங்கள்”, என்று வாடிக்கையாளர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து வாடிக்கையாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனாலும், வாடிக்கையாளர்கள் பலர் தொடர்ந்து வந்துகொண்டே இருந்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story