பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது
வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் 41 ஆயிரத்து 461 மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் மூலம் ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்பட்டு வருகிறது.
வேலூர்,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற (மார்ச்) 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது. வேலூர் கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 519 மாணவர்கள், 11 ஆயிரத்து 398 மாணவிகள் என 20 ஆயிரத்து 917 மாணவ- மாணவிகள், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 761 மாணவர்கள், 10 ஆயிரத்து 783 மாணவிகள் என 20 ஆயிரத்து 544 மாணவ-மாணவிகள் தேர்வுக் காக தயாராகியுள்ளனர்.
அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 355 பள்ளிகளை சேர்ந்த 41 ஆயிரத்து 461 மாணவ-மாணவி கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதற்காக 184 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் அரசு தேர்வுகள் துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் மாணவர் களுக்கான ஹால் டிக்கெட்டு களை பள்ளியின் ரகசிய குறியீடு மற்றும் பதிவு எண் களை பயன்படுத்தி, வருகிற 26-ந் தேதிக்குள் (திங்கட் கிழமை) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் களுக்கு அரசுத்தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அரசு இணையதளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து பிளஸ்-2 தேர்வு எழுதும் 41 ஆயிரத்து 461 மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

Related Tags :
Next Story