குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை
பருத்தி, மக்காச்சோளத்தை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் சுதர்சன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் மற்றும் கரும்பு வளர்ப்போர் சங்க நிர்வாகி டி.கே.ராமலிங்கம் பேசுகையில், பெரம்பலூர் அருகே எறையூர் பொதுத்துறை சர்க்கரை ஆலை மூலம் வழங்கப்பட வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை விரைந்து வழங்க வேண்டும். கோடை காலம் தொடங்க இருப்பதால் சென்ற ஆண்டை போலவே தற்போது கால் நடைகளுக்கு உணவளிக்கும் பொருட்டு மானிய விலையில் வைக்கோல் வழங்க வேண்டும் என்று கூறினர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குரும்பலூர் ரமேஷ் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்டவை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. சாதாரண பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,200-ம், நீண்ட இலை பருத்திக்கு ரூ.4,300-ம், 100 கிலோ எடை கொண்ட ஒரு மக்காச்சோள மூட்டை ரூ.1,420 என மத்திய அரசு மூலம் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பருத்தி, மக்காச்சோளத்தை மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்வதற்கு முன்பாக இடைத்தரகர்கள் சாதாரண பருத்தி குவிண்டாலுக்கு ரூ.3,500, நீண்டஇலை பருத்தி ரூ.3,700, மக்காச் சோளம்-ரூ.1,200 என குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதுகுறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
2017-18-ம் ஆண்டில் 1375 விவசாய மின்இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 671 பேருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. மீதி 704 பேருக்கு விரைவில் விவசாய மின்இணைப்பு வழங்க வேண்டும். விஜய்மல்லையா, லலித்மோடி, நீரவ் மோடி ஆகியோர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிவிடுகின்றனர். ஆனால் விவசாய பணிக்கு கடன் வாங்கும் ஏழை-எளிய விவசாயிகள் மீது தேசியமயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வது எந்த வகையில் நியாயம்? என்பது புலப்படவில்லை. எனவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயத்தில் வேரழுகல்நோய் தாக்குவதால் சீக்கிரம் விற்றுவிட வேண்டும் என்று குறைந்த விலைக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது செட்டிக்குளம் வெங்காய குளிர்பதன சேமிப்பு கிடங்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே அதனை சீர்செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அறிவிக்கப்பட்ட போதிலும் விவசாயிகள் அதில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. இதற்கு தனியார் வியாபாரிகள் அதிக விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்வதே காரணம். எனவே மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட பருத்தி கார்ப்பரேசன் அதிகாரிகளை இங்கு வரவழைத்து அரசு நிர்ணயித்த விலையில் பருத்தி ஏலம் நடைபெறும் வகையில் செய்ய வேண்டும் என்றார்.
இதே போல் பூலம்பாடி பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாணிக்கம், ஜெயராமன், ஏ.கே.ராஜேந்திரன் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பேசினர். குறைகளை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பெரியசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கலைவாணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story