கள்ளக்காதலியுடன் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை
காங்கிரஸ் கட்சி பிரமுகர் தனது கள்ளக்காதலியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள மேலகீரப்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரகாசன். இவருடைய மகன் சகாதேவன்(வயது 43). இவர் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் ஆவார். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக, கணவரை பிரிந்து திருச்சியில் வசித்து வரும் சித்ரா, அங்குள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.
மேலகீரப்பாளையத்தை சேர்ந்தவர் சேகர் இவருடைய மனைவி முருகேஸ்வரி(35). கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேஸ்வரி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், சகாதேவனுக்கும், முருகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.
இருவரும் தனித்து இருந்ததால், ஒன்றாக சேர்ந்து வாழ்க்கையை தொடர்வது என்று தீர்மானித்தனர். அதன்படி, திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவியாக திருப்பணிநத்தம் கிராமத்தில் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதைதொடர்ந்து முருகேஸ்வரி கர்ப்பமடைந்தார்.
கடந்த 2 நாட்களாக இவர்களின் வீட்டு கதவு பூட்டி கிடந்தது. இந்த நிலையில் நேற்று அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர், இதுபற்றி புவனகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சகாதேவன் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகே தரையில் முருகேஸ்வரி பிணமாக கிடந்தார். இருவரது உடலும் அழுகிய நிலையில் கிடந்ததால், தூர்நாற்றம் வீசியது.
சகாதேவனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவு எடுத்து, இதுபோன்ற விபரீத முடிவை மேற்கொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Tags :
Next Story