சூப்பிரண்டு போல பேசி போலீசாரிடம் பணம் பறிக்க காவல் நிலையத்துக்கே வந்த வாலிபர் கைது
சூப்பிரண்டு போல பேசி போலீசாரிடம் பணம் பறிக்க காவல் நிலையத்துக்கே வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை காந்திபுரத்தில் உள்ள காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 21-ந் தேதி இரவு ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஆசாமி ‘நான் விஜயவாடா போலீஸ் சூப்பிரண்டு ரவிகாந்த் பேசுகிறேன். எனது உறவினர் ஒருவர் கோவை வந்துள்ளார். அவரது பணப்பை திருட்டு போய் விட்டது. அவர் காட்டூர் போலீஸ் நிலையம் வருவார். இன்ஸ்பெக்டரிடம் சொல்லி அவரிடம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள். பின்னர் உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பராஜ், இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த அவர் விஜயவாடா போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய போது, ரவிகாந்த் என்ற பெயரில் போலீஸ் சூப்பிரண்டு யாரும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரவிகாந்த் என்ற பெயரில் சிறப்பு பிரிவுகளில் போலீஸ் சூப்பிரண்டு யாரும் இருக்கிறார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அப்படி யாரும் இல்லை என்பது தெரியவந்தது.
உடனே போலீஸ் நிலையத்துக்கு வந்த செல்போன் எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் மோசடி ஆசாமி போனில் சொன்னது போல பணம் வாங்குவதற்காக கோவை காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு ஒரு நபர் வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் தான் போலீஸ் சூப்பிரண்டு என்று கூறி பணம் கேட்டவர் என்பதும், அவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜீவாநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 31) என்பதும், இவர் கேட்டரிங் டிப்ளமோ படித்து விட்டு தொலைதூர கல்வி மூலம் எம்.பி.ஏ. படித்து வருவதும், அவரது குடும்பத்தினர் ஆந்திராவில் வசிப்பதும் தெரிய வந்தது.
ஆந்திரா மாநிலம் அடிலாபேட் போலீஸ் நிலையத்தில் துணை சூப்பிரண்டு போல நடித்து வாக்கி-டாக்கி திருடியதாக கோபாலகிருஷ்ணன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைதாகி வெளியே வந்த அவர் சென்னை ரெயில் நிலையத்தில் இரும்புக்கம்பிகளை திருடியபோது கையும் களவுமாக சிக்கினார். மேலும் இவர் மீது மதுரை, தஞ்சாவூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன. சூப்பிரண்டு போல போலீசாரிடமே பணம் பறிக்க முயன்ற கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story