ஆன்லைன் பதிவை கண்டித்து அலுவலகங்களை அடைத்து பத்திர எழுத்தர்கள் போராட்டம்
ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையை கண்டித்து தேனியில் பத்திர எழுத்தர்கள் தங்களின் அலுவலகங்களை அடைத்து போராட்டம் நடத்தினர்.
தேனி,
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கையால் பத்திரங்கள் எழுதப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையால் பத்திர எழுத்தர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், இந்த நடைமுறைக்கு பத்திர எழுத்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதன்படி, தேனியில் பத்திர எழுத்தர்கள் நேற்று ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையை கண்டித்து தங்களின் அலுவலகங்களை அடைத்து போராட்டம் நடத்தினர்.
தேனி பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் சுமார் 20 பத்திர எழுத்தர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டன. ஒருநாள் அடையாள அடைப்பு போராட்டத்தை நடத்தினர். இதுகுறித்து பத்திர எழுத்தர்கள் கூறுகையில், ‘பழைய நடைமுறைப்படி ஒரு நாளைக்கு 50 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஆன்லைன் பத்திரப்பதிவில் ஒரு நாளைக்கு 5 பத்திரங்கள் என்ற அளவில் தான் பதிவு செய்ய முடிகிறது. இதனால் பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளன.
எனவே, இந்த ஆன்லைன் பதிவு முறையை தடை செய்ய வேண்டும்’ என்று கூறினர்.

Related Tags :
Next Story