பீர் பாட்டிலால் குத்தி தொழிலாளி படுகொலை
நெல்லையில் பீர் பாட்டிலால் குத்தி தொழிலாளியை படுகொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலையில் ரெயில்வே தண்டவாளத்தையொட்டி சுப்பிரமணிய நகர் உள்ளது. இங்கு தார் ரோடுகள், பாலங்கள் அமைத்து வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியையொட்டி உள்ள முட்புதருக்கு நேற்று காலை சென்ற ஒருவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அங்கு ஒரு ஆண் கழுத்து பகுதியில் பலத்த ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சுகுணா சிங், உதவி கமிஷனர் மாரிமுத்து, தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டு கிடந்தவர் 45 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். அவர் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார். முறுக்கு மீசையுடன் திடகாத்திரமான உடல் அமைப்புடன் இருந்தார். அவரது கையில் “எம்.முருகன்” என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. நேற்று இரவு மர்ம ஆசாமிகள், இவரை காட்டுப்பகுதிக்கு மது குடிக்க அழைத்து வந்துள்ளனர். அங்கு பீர் பாட்டிலால் கழுத்தில் குத்தியும், அறுத்தும் படுகொலை செய்துள்ளனர்.
பிணம் கிடந்த இடத்துக்கு அருகே ரத்தம் ஆங்காங்கே சிதறி கிடந்தது. இதனால் இறந்தவர், கொலையாளிகளுடன் உயிருக்காக கடுமையாக போராடி உள்ளார். ஆனால், அவர்கள் கொடூரமாக தூக்கிச்சென்று அடர்ந்த முட்புதர் பகுதியில் கொலை செய்து உடலை வீசிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
ஆனால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அடையாள அட்டைகள் எதுவும் அவரது சட்டைப்பையில் கிடைக்கவில்லை. இதற்கிடையே, பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் காணாமல் போனது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உறவினர்களை போலீசார் அழைத்து வந்து, இறந்தவரின் உடலை அடையாளம் காட்டினர். ஆனால் உறவினர்கள் பார்த்து, இறந்தவர் அவர் கிடையாது? என்று கூறிச்சென்றனர்.
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? என தெரியவில்லை என்பதால் கொலைக்கான காரணமும் உடனடியாக கிடைக்கவில்லை. இறந்தவர் குறித்த தகவல் நீண்ட நேரமாகியும் கிடைக்காததால், அவர் வெளிமாவட்டத்தை சேர்ந்த தொழிலாளியாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவரை நெல்லைக்கு அழைத்து வந்து மது குடிக்க வைத்து கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை படுகொலை செய்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story