ஒரு மணிநேரம் பணியை புறக்கணித்து வணிகவரித்துறை ஊழியர்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்


ஒரு மணிநேரம் பணியை புறக்கணித்து வணிகவரித்துறை ஊழியர்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2018 3:45 AM IST (Updated: 24 Feb 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

வணிக வரித்துறை பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றினார்கள்.

திருப்பூர்,

வணிக வரித்துறையில் பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்து வணிக வரித்துறை பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றினார்கள். பின்னர் மாலை 4¾ மணி முதல் 5¾ மணி வரை ஒரு மணி நேரம் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள திருப்பூர் மாவட்ட அனைத்து வணிக வரித்துறை அலுவலகங்களில் பணியாற்றிய ஊழியர்கள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றினார்கள்.

பின்னர் மாலையில் ஒரு மணி நேரம் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து பணியை புறக்கணித்து போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இதில் வணிக வரித்துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story