மனித கரங்களால் இயங்கும் தூக்குப்பாலத்துடன் உள்ள பாம்பன் ரெயில் பாலத்துக்கு 105 வயது
மனித கரங்களால் இயங்கும் தூக்குப்பாலத்துடன் உள்ள பாம்பன் ரெயில் பாலத்துக்கு இன்று (சனிக்கிழமை) 105 வயது ஆகும்.
ராமேசுவரம்,
நாட்டின் தென்கோடி எல்லையாக விளங்கி வருவது ராமேசுவரம் தீவு. சுதந்திரத்திற்கு முன் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல நாடுகளுக்கு கடல்வழி போக்குவரத்தையே பிரதானமாக கொண்டிருந்தனர். இந்தியாவின் வழியாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புகழ்பெற்று விளங்கிய தனுஷ்கோடி துறைமுகத்தை பயன்படுத்தினர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பாக்ஜலசந்தி பகுதிக்கு கப்பல்கள் சென்று வருவதற்காக கடந்த 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பாம்பனில் சுமார் 80 அடி அகலம், 300 அடி நீளத்தில் கால்வாய் தோண்டப்பட்டது. பின்னர் அந்த கால்வாயில் சிறிய அளவிலான சரக்கு கப்பல்கள் சென்று வரத்தொடங்கின.
அப்போது மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் செல்வதற்கு படகுகளை மட்டுமே பயன்படுத்த முடியும். பின்னர் ராமேசுவரம் தீவை, நாட்டின் நிலபரப்புடன் இணைக்கும் வகையில் ரெயில் போக்குவரத்தை தொடங்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். செய்யப்பட்டது. இதையடுத்து பாம்பன் கடலினை கடந்து செல்ல ரெயில் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான முதல்கட்டப் பணிகள் 1902-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த பாலத்திற்காக 146 இரும்பு தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு அவற்றின் மீது 145 இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டன. 11 ஆண்டுகால பணிக்கு பின்னர் ரெயில் செல்வதற்காக தண்டவாளம் அமைக்கப்பட்டது. பின்னர் ரெயிலும், கப்பலும் செல்லும் வகையில் தூக்குப்பாலம் பணிகள் 1913-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை அமைக்கும் பணிகளை ஆங்கிலேய பொறியாளர் ஷெர்சர் மேற்கொண்டார்.
தூக்குப்பாலத்துக்காக கடலுக்குள் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு அதன் 2 பகுதிகளிலும் 81 டிகிரி கோணத்தில் திறந்து மூடும் வகையிலான இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டன. இந்த தூக்குப் பாலத்திற்கு ஷெர்சரின் நினைவாக ஷெர்சர் தூக்குப்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுஉள்ளது.
பாம்பன் ரெயில் பாலத்தில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது. அப்போது தென் இந்திய ரெயில்வே கம்பெனியின் நிர்வாக மேலாளர் நெவில் ப்ரீஸ்ட்லி என்பவரால் இந்த பாலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் மூலம் ரெயில் பாதை ராமேசுவரம் தீவு மற்றும் தனுஷ்கோடி வரை சென்றது.
இந்த பாலம் கடந்த 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஷெர்சர் பாலமும் கர்டர்களும் மட்டுமே தப்பின. எஞ்சியவற்றை வைத்து அப்போதைய ரெயில்வே செயற்பொறியாளராக இருந்த ஸ்ரீதரன் என்பவரது தலைமையிலான ரெயில்வே தொழிலாளர்கள், 67 நாட்களில் இப்பாலத்தை சீரமைத்தனர். மேலும் இந்த பாலத்தில் பொறுத்தப்பட்டுள்ள அனிமா மீட்டர் கருவி காற்றின் வேகத்தை கண்டறிகிறது. மணிக்கு 58 கி.மீ. வேகத்திற்கு மேல் காற்று வீசும் போது தானியங்கி சிக்னல் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டு பாலத்தில் ரெயில் செல்ல அனுமதிப்பது இல்லை.
இன்று வரை பாம்பன் தூக்குப் பாலத்தை கடக்க கப்பல்கள் வரும் போது மனித சக்தியால் தான் தூக்குப் பாலம் திறக்கப்படுகிறது. 16 மனிதர்களின் கரங்கள் தூக்குப்பாலத்தை திறக்கவும், மூடுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரு புறத்திலும் ஒரு பகுதிக்கு 8 ரெயில்வே ஊழியர்கள் வீதம் 16 பேர் நின்று பற்சக்கரங்களை சுற்றுவார்கள். அப்போது தூக்குப்பாலம் சிறிது சிறிதாக மேலே உயரும். கப்பல் சென்ற பிறகும் இதே நடைமுறைப்படி பாலம் மீண்டும் ரெயில் செல்லும் வகையில் பழைய நிலைக்கு கொண்டு வரப்படும்.
பாம்பன் பால ரெயில் பாதை அமைக்கப்பட்ட நாள் முதல் மீட்டர்கேஜ் பாதையாகவே இருந்தது. பின்னர் 2006-ம் ஆண்டு மானாமதுரை -ராமேசுவரம் ரெயில் பாதை அகலப்பாதையாக அமைக்கும் பணிகள் நடைபெற்றன. 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அகலப்பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. நூற்றாண்டு கண்ட சிறப்பு மிக்க பாம்பன் ரெயில் பாலத்துக்கு இன்று (சனிக்கிழமை) 105 வயது.
கடந்த 104 ஆண்டுகளில் மட்டும் பாம்பன் தூக்குப் பாலத்தை ஆயிரக்கணக்கான கப்பல்கள் கடந்து சென்றதன் மூலம் பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. இந்த ஆண்டுடன் ரெயில் தூக்குப்பாலத்தை இயக்குவதில் இருந்து மனித கரங்கள் விடைபெறுகின்றன. ஜூன் மாதத்தில் ரெயில்வே பாலத்தின் மைய பகுதியில் மனித கரங்களால் இயங்கும் தூக்குப் பாலம் அகற்றப்பட்டு மின்மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப் பாலத்தை அமைக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு ரெயில்வே துறைக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதனால் இந்த ஆண்டுடன் பழமையான தூக்குப்பாலம் தனது பணியில் இருந்து விடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story