தந்தை, மகனை தாக்கிய விவசாயிக்கு 18 மாதம் சிறை தண்டனை


தந்தை, மகனை தாக்கிய விவசாயிக்கு 18 மாதம் சிறை தண்டனை
x
தினத்தந்தி 24 Feb 2018 3:15 AM IST (Updated: 24 Feb 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே உள்ள பில்லாலி கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள பில்லாலி கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம்(வயது 40). இவருக்கும், இவருடைய மனைவி சித்ராவுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சித்ராவின் உறவினரான பணப்பாக்கத்தை சேர்ந்த விவசாயியான சரவணன் உள்பட 6 பேர் சேர்ந்து திருவேங்கடத்தையும், அவரது தந்தையையும் தாக்கினர்.

 இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக பண்ருட்டி குற்றவியல் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. சரவணனை 18 மாதம் சிறை தண்டனையும், மற்ற 5 பேரை வழக்கில் இருந்து விடுவித்தும் நீதிபதி கணேஷ் உத்தரவிட்டார்.


Next Story