வேடசந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வேடசந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2018 3:00 AM IST (Updated: 24 Feb 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேடசந்தூர்,

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டையொட்டி நடந்த அணிவகுப்பில் தொண்டர்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து வேடசந்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துச்சாமி, அருள்செல்வம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் துரைக்கண்ணன், முருகேசன், பழனியம்மாள், முருகன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களை தாக்கிய போலீசாரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story