புத்தூர் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன
திருச்சி புத்தூர் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினார்கள்.
திருச்சி,
திருச்சி புத்தூர் மார்க்கெட்டில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடைபாதைக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகள் நடத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி கோ.அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையில் நேற்று அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இறங்கினர். புத்தூர் மார்க்கெட்டில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட காய்கறி கடைகள் 55, மீன் கடைகள் 20 ஆகும். இந்த கடைகளை தவிர ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 30 கடைகள் நேற்று பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன. உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் வேல்முருகன் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார்கள். கடைகளின் கூரைகள், சுவர்கள் இடித்து தள்ளப்பட்டது. அவற்றை மாநகராட்சி குப்பை லாரிகளில் எடுத்து சென்றனர். அப்போது சில வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
புத்தூர் மார்க்கெட்டில் ஏற்கனவே இரண்டு முறை நடைபாதைக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் வியாபாரிகள் மீண்டும் மீண்டும் அதே இடங்களில் கடை வைப்பதால் போக்குவரத்து நெருக்கடி உள்பட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இனியும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் கட்டினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story