பஞ்சாப் நேஷனல் வங்கி முன்பு இளைஞர் காங்கிரசார் நூதன போராட்டம்


பஞ்சாப் நேஷனல் வங்கி முன்பு இளைஞர் காங்கிரசார் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2018 5:00 AM IST (Updated: 24 Feb 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் நேஷனல் வங்கி முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டத்தை இளைஞர் காங்கிரசார் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு தொழிலதிபர் நிரவ்மோடி வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க பாரதீய ஜனதா அரசு தவறிவிட்டதாக புகார் தெரிவித்து பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்தப்போவதாக புதுவை இளைஞர் காங்கிரஸ் அறிவித்திருந்தது.

அதன்படி இளைஞர் காங்கிரசார் ராஜா தியேட்டர் சந்திப்பு அருகே நேற்று கூடினார்கள். அங்கிருந்து தாரை, தப்பட்டை, மலர் வளையத்துடன் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஊர்வலமாக வந்தனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். வங்கி அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

ஆனால் அதையும் மீறி பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாசலுக்கு சென்று மலர் வளையம் வைத்து அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங் களை எழுப்பினார்கள். இந்த நூதன போராட் டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜாராமன், சரவணன், கோபாலமூர்த்தி, செந்தில் குமரன், லட்சுமணன், அன்பழ கன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட் டத்தால் காமராஜ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story