கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல்
இளம்பிள்ளையில் கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இளம்பிள்ளை,
இளம்பிள்ளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே இளம்பிள்ளை கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்துக்கு இளம்பிள்ளை, ரெட்டிபட்டி, காட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பொதுமக்கள் பட்டா சிட்டா அடங்கல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற வந்து சென்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இளம்பிள்ளை கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைனில் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தவர்களும், அரசின் மானிய திட்டங்கள், கடன்கள் பெற வருபவர்களும் சான்றிதழ்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் தினமும் பொதுமக்கள் அலுவலகத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
இளம்பிள்ளை கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இளம்பிள்ளைக்கு கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் வந்து, சான்றிதழ்களை வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவரும் சரிவர வருவது இல்லை.
இதனால் தற்போது கிராம நிர்வாக அலுவலகம் மூடிக்கிடக்கிறது. கடந்த 1½ மாதங்களாக திறக்கவே இல்லை. இதன் காரணமாக தினமும் சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் அலுவலகம் பூட்டி இருப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். இதனால் சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே இளம்பிள்ளை பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலரை நியமித்து, சான்றிதழ்கள் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Tags :
Next Story