வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
நாமகிரிப்பேட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமகிரிப்பேட்டை பேரூராட்சி வாரச்சந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையத்திற்கு ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் இருந்து நாமகிரிப்பேட்டை, பட்டணம், ஆர்.புதுப்பட்டி மற்றும் சீராப்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.43.92 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வரும் பணியையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் பேரூராட்சியில் 14-வது வார்டிற்கு உட்பட்ட சத்யா நகரில் புதிய வீடு கட்டும் பணி மற்றும் புதுகாலனி பகுதியில் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து கோரையாறு பகுதியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் திறந்த வெளிக்கிணற்றை மேம்பாடு செய்து குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கான பணி மற்றும் நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம், மெட்டாலா பகுதியில் பிரதம மந்திரி ஆகாஷ் யோஜனா திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அதே போல், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.72.63 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து திட்ட பணிகளையும் தரமாகவும், தாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முருகன், உதவி செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை துணை நில நீர் வல்லுனர் முத்துகுமாரசாமி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் மல்லிகைசுந்தரம், கிருஷ்ணவேணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்வேல், சாந்தா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story