கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ரெயில்வே துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. கும்மிடிப்பூண்டி சிப்காட் உள்பட முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த ரெயில்வே கேட் பல வருடங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது.
இந்நிலையில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப ரெயில்வே கேட்டின் கீழ் சுரங்கபாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக ரெயில்வே கேட்டையொட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ரெயில்வே துறையினர் சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
அதன்படி சிலர் தங்களது ஆக்கிரமிப்பு பொருட்களை தாங்களே முன்வந்து எடுத்துச்சென்றனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ரெயில்வே துறையினர் நேற்று ஜே.சி.பி. எந்திரம் கொண்டு இடித்து அகற்றினர். இதையொட்டி அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் அங்கட்குமார் தலைமையில் ரெயில்வே போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Related Tags :
Next Story