குடியாத்தம் தாலுகா அலுவலக வாயிலில் படுத்து விவசாயி போராட்டம்


குடியாத்தம் தாலுகா அலுவலக வாயிலில் படுத்து விவசாயி போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2018 4:22 AM IST (Updated: 24 Feb 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவில் 6 மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார்.

குடியாத்தம்,

குடியாத்தம் அருகே சேம்பள்ளி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் காட்டையன் (வயது 61), விவசாயி. இவருக்கு 3 ஏக்கர் பூர்வீக சொத்து உள்ளது. இதில் இவரது சகோதரர்கள் 3 பேருக்கும் பங்கு உள்ளது.

இந்த நிலத்தை பிரித்து சர்வே செய்து கொடுக்குமாறு காட்டையன் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவில் 6 மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை நிலத்தை அளந்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் வரவில்லை. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று பகல் 11-30 மணியளவில் காட்டையன் குடியாத்தம் தாலுகா அலுவலக நுழைவுவாயிலில் படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்ட வழங்கல் அலுவலர் கலைவாணி, வருவாய் ஆய்வாளர் எத்திராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் விரைந்து சென்று காட்டையனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக நிலத்தை அளந்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து காட்டையன் போராட்டத்தை கைவிட்டார்.

இதனால் சுமார் 30 நிமிடம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story