கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்–சபையில் காலியாகும் 4 இடங்களுக்கு மார்ச் 23–ந் தேதி தேர்தல்


கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்–சபையில் காலியாகும் 4 இடங்களுக்கு மார்ச் 23–ந் தேதி தேர்தல்
x
தினத்தந்தி 24 Feb 2018 4:47 AM IST (Updated: 24 Feb 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தை சேர்ந்த ரகுமான்கான், ராஜீவ் சந்திரசேகர், ராமகிருஷ்ணா, பசவராஜ் பட்டீல் ஆகியோர் டெல்லி மேல்–சபை எம்.பி.க்களாக உள்ளனர்.

பெங்களூரு,

ஏப்ரல் மாதம் 2–ந் தேதியுடன் இவர்களின் பதவி காலம்  நிறைவடைய உள்ளது. இதையடுத்து காலியாகும் இந்த 4 இடங்களுக்கு மார்ச் 23–ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் (மார்ச்) 5–ந் தேதி தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய மார்ச் 12–ந் தேதி கடைசி நாள் ஆகும். மனுக்கள் பரிசீலனை மார்ச் 13–ந் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற மார்ச் 15–ந் தேதி கடைசி நாள் ஆகும். மார்ச் 23–ந்தேதி அன்று ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் வாக்காளர்கள் எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.


Next Story