வாணாபுரம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் அகற்றம்
முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலைகள் நேற்று முன்தினம் இரவு நிறுவப்பட்டன.
வாணாபுரம்,
வாணாபுரம் அருகே 3 கிராமங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் அகற்றப்பட்டன.
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் கோலாகலமாக இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாணாபுரம் அருகில் உள்ள அத்திப்பாடி கிராமத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடம் முன்பு முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலைகள் நேற்று முன்தினம் இரவு நிறுவப்பட்டன.
சிலைகளை வைப்பதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வாணாபுரம் போலீசார் விரைந்து சென்று யாருடைய சிலைகளாக இருந்தாலும் அனுமதியின்றி வைக்கக் கூடாது என்றும், நிறுவிய சிலைகளை அகற்றுமாறும் அ.தி.மு.க.வினரிடம் கூறினார்.
உங்களால் முடிந்தால் சிலைகளை அகற்றி பாருங்கள் என்று பதிலுக்கு அ.தி.மு.க.வினரும் ஆவேசமாக பேசினர். இதையடுத்து, போலீசார் அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை திறந்து வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அப்போது திருவண்ணாமலை தாசில்தார் ரவி, திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, வாணாபுரம் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளை அகற்ற முடிவு செய்தனர். இதனால் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அனுமதியின்றி சிலைகளை வைத்தது தவறு என்று தாசில்தாரும், போலீசாரும் சுட்டிக் காட்டினர்.
வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் முறையாக அனுமதி பெற்று சிலைகளை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு நிறுவப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலைகளை பெயர்த்து எடுத்து லாரியில் ஏற்றி திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுச் சென்றனர்.
முன்னதாக சிலைகளை எடுத்து செல்லக் கூடாது என அ.தி.மு.க.வினர் கடுமையாக போராடினர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. அ.தி.மு.க.வினர் கொந்தளிப்புடன் காணப்பட்டனர்.
அதேபோல் தச்சம்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லோத்து கிராமத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளும், வெறையூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆணானந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளும் அகற்றப்பட்டன.
இதனால் அந்த பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story