சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா
கர்நாடக சட்டசபையில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் குறுக்கிட்டு விவசாய கடனை ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த சித்தராமையா, “கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரையிலான விவசாய கடனை நாங்கள் தள்ளுபடி செய்துள்ளோம். மொத்தம் ரூ.8 ஆயிரத்து 165 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை பா.ஜனதா ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட கடனை அடைக்கும் பணியையும் நாங்களே செய்தோம்” என்றார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர் ராஜண்ணா குறுக்கிட்டு, “மத்திய அரசு இதுவரை தொழில் அதிபர்களின் ரூ.1 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு மீண்டும் ரூ.2.11 லட்சம் கோடியை தேசிய வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. இந்த பணம் எல்லாம் விஜய் மல்லையா, நிரவ்மோடி உள்ளிட்ட தொழில் அதிபர்களுக்கு செல்கிறது” என்றார்.
இதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் குரலை உயர்த்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கடும் வாக்குவாதம் உண்டாகி கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. நாட்டை விட்டு சென்ற கள்வர்களுக்கு கடன் வழங்கியது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
அப்போது பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கடும் அமளி உண்டானது. அந்த சந்தர்ப்பத்தில் பா.ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். காங்கிரசை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இது 10 சதவீத ‘கமிஷன்’ அரசு என்று பா.ஜனதாவினர் குற்றம்சாட்டினர்.
அப்போது கடும் கோபம் அடைந்த சித்தராமையா, தர்ணா நடத்தும் பா.ஜனதா உறுப்பினர்களை சபையில் இருந்து வெளியேற்றுங்கள் என்று சபாநாயகரிடம் கோரினார். சபையில் கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து சபையை சபாநாயகர் சிறிது நேரம் ஒத்திவைத்தார்.

Related Tags :
Next Story