சினிமா பெண் கலைஞரை கற்பழித்தவர் கைது
மும்பை வெர்சோவாவை சேர்ந்த 31 வயது சினிமா பெண் கலைஞர் ஒருவர், கடந்த மாதம் பால்கர் மாவட்டம் வசாய்க்கு சென்றிருந்தார்.
மும்பை,
தகிசர் வந்த அவர் அங்கிருந்து வீடு திரும்ப ஆட்டோவுக்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு ‘லிப்ட்’ கொடுத்தார். அப்பெண்ணை ஒரு கட்டிடத்துக்கு அழைத்து சென்று மிரட்டி கற்பழித்தார். இதுகுறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், சினிமா பெண் கலைஞரை கற்பழித்தவர் பெயர் பிரதிப் திவாரி(வயது27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தகிசரில் வைத்து அவரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது ஏற்கனவே 9 கற்பழிப்பு, பாலியல் தொல்லை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story