இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவர் கைது


இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2018 5:19 AM IST (Updated: 24 Feb 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்நிலையத்தில் தனியாக நின்ற இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

நவிமும்பை துர்பே ரெயில்நிலைய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி கொண்டு இருந்த காட்சிகளை நேற்றுமுன்தினம் காலை 11.30 மணியளவில் ரெயில்வே பாதுகாப்புபடை அதிகாரி டி.கே.சர்மா கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து கொண்டு இருந்தார். அப்போது, ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் ஒருவர், இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் அங்கு 2 ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களை அனுப்பினார். இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் பிளாட்பாரத்தில் பதற்றத்துடன் நின்றுகொண்டு இருந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.

உடனடியாக பாதுகாப்பு படை வீரர்கள், தப்பியோட முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் வாஷி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், பிளாட்பாரத்தில் தனியாக நின்ற இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவர் கன்சோலி பகுதியை சேர்ந்த நரேஷ் ஜோஷி(வயது43) என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story