குழந்தை சட்டங்கள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி நெல்லையில் நடந்தது


குழந்தை சட்டங்கள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி நெல்லையில் நடந்தது
x
தினத்தந்தி 25 Feb 2018 3:00 AM IST (Updated: 24 Feb 2018 7:01 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை பாதுகாப்பு சட்டங்கள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

நெல்லை,

குழந்தை பாதுகாப்பு சட்டங்கள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

பயிற்சி முகாம்


குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் சட்டங்கள் குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். கலெக்டர் சந்தீப் நந்தூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

முழு பொறுப்பு

நமது நாட்டில் குழந்தை வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையை புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சிறு வயதிலே மாணவர்கள் வன்முறை, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். இதற்கு குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதே ஒரு காரணமாகும்.

பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் முழு பொறுப்பும் ஆசிரியர்களுக்கு தான்உள்ளது. இதுபோன்ற பயிற்சியின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் திடீர் மாற்றங்களை கண்காணித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கையேடு வெளியீடு

பள்ளிகளில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து அதற்கு தீர்வுகான வேண்டும். அனைத்து குழந்தைகளும் நன்றாக படித்து சிறந்த குடிமக்களாக திகழ்ந்திட ஆசிரியர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தொடர்ந்து கற்றல் திறன் குறைபாடு மற்றும் மெல்ல கற்கும் குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கையேடு, ஆசியர்களுக்கான நேர்மறை எண்ணங்களை ஒழுங்குபடுத்தும் நுட்பங்கள் குறித்த கையேட்டினையும் கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம் பெற்றுக்கொண்டார்.

Next Story