புகார் கொடுக்க சென்ற மாமனாருக்கு மிரட்டல்: போலீஸ் நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்றவர் கைது


புகார் கொடுக்க சென்ற மாமனாருக்கு மிரட்டல்: போலீஸ் நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2018 2:00 AM IST (Updated: 24 Feb 2018 7:50 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே புகார் கொடுக்க சென்ற மாமனாரை மிரட்டும் வகையில் போலீஸ் நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை அருகே புகார் கொடுக்க சென்ற மாமனாரை மிரட்டும் வகையில் போலீஸ் நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் –மாமனார் தகராறு

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை சேர்ந்தவர் சங்கர் (வயது 34). தொழிலாளி. சமீபகாலமாக இவர் சரியாக வேலைக்கு செல்லவில்லையாம். இதை அறிந்த அவருடைய மாமனார் சங்கர் ராஜ் நேற்று முன்தினம் சங்கர் வீட்டுக்கு வந்தார். அங்கு வேலைக்கு செல்லாதது குறித்து மருமகனிடம் தட்டிக்கேட்டார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், மாமனாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

இது தொடர்பாக சங்கர்ராஜ் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தார். இதற்காக அவர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையம் அருகில் நடந்து சென்றார்.

தீக்குளிக்க முயற்சி

இதை அறிந்த சங்கர் மண்எண்ணெய் கேனுடன் அவரை பின் தொடர்ந்து சென்றார். போலீஸ் நிலையம் எதிரே மாமனாரை வழிமறித்து புகார் கொடுக்க கூடாது என்று மிரட்டினார். அதை மீறி போலீஸ் நிலையத்துக்குள் சென்று புகார் அளித்தால் தீக்குளித்து தற்கொலை செய்து விடுவேன் என்று கூறினார். ஆனால் இதை பொருட்படுத்தாமல் சங்கர்ராஜ் புகார் அளிப்பதில் உறுதியாத இருந்ததால். இதனால் சங்கர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதைக்கண்ட போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் சங்கர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

வாலிபர் கைது

பின்னர் இது தொடர்பாக கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையம் எதிரே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story