கணவர் இறந்த வேதனையில் இருந்த பெண், வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்


கணவர் இறந்த வேதனையில் இருந்த பெண், வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 25 Feb 2018 4:15 AM IST (Updated: 24 Feb 2018 11:33 PM IST)
t-max-icont-min-icon

கணவர் இறந்த வேதனையில் இருந்த பெண், வீட்டுக்குள் பிணமாக கிடந்தார் போலீஸ் விசாரணை

நாகர்கோவில்,

நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டை சேர்ந்தவர் பாலையா. பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (வயது 57). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பாலையா கடந்த சில வாரங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் பஞ்சவர்ணம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கணவர் இறந்த பிறகு அவர் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் இவருக்கு தினமும் காலையிலும், இரவிலும் உறவினரான பொன்னி என்பவர் சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம்.

இதேபோல் நேற்று காலையும் பொன்னி சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்றார். அங்கிருந்த நாற்காலியில் பஞ்சவர்ணம் பிணமாக கிடந்தார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொன்னி, இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பஞ்சவர்ணம் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. கணவர் இறந்த சில வாரங்களில் மனைவியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story