ஜவுளிக்கடையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான துணிகள், பணம் திருட்டு போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான துணிகள் மற்றும் பணம் திருடப்பட்டது. வாடிக்கையாளர் போல் வந்த பெண்கள் கைவரிசையில் ஈடுபட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் தெலுங்கு செட்டி தெருவை சேர்ந்தவர் நாகூர்கான். இவருடைய மனைவி பாத்திமா பீவி. இவர், நாகர்கோவில்–திருவனந்தபுரம் ரோட்டில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் பெண்கள் ஆடையகம் (ஜவுளிக்கடை) நடத்தி வருகிறார். இந்த கடையை இவருடைய பேத்தி அமீரா (24) கவனித்து வருகிறார். கடையில் ஹேமா என்ற பெண் வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ஹேமா நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றார்.
அப்போது கடையின் ஷட்டரில் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறந்த நிலையில் இருந்தது. மேலும் கடைக்குள் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்ததோடு கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுபற்றி அமீராவுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த விலை உயர்ந்த துணிகளை காணவில்லை. மேஜையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மாயமாகி இருந்தது. இரவில் யாரோ சிலர் கடைக்குள் புகுந்து துணிகளையும், பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது.
பின்னர் இச்சம்பவம் பற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கடையில் திருடிச் சென்றவர்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளனரா? என்றும் சோதனை செய்தனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
கடையில் திருட்டுப்போன துணிகள், பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் திருட வந்தவர்கள், போலீசில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக கண்காணிப்பு கேமராவையும் சேர்த்து திருடியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் கருவியையும் தூக்கிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2 தினங்களுக்கு முன் கடைக்கு வாடிக்கையாளர் போல 2 பெண்கள் வந்துள்ளனர். ஆனால் அவர்கள் விலையை மட்டும் விசாரித்து விட்டு துணி எதுவும் வாங்காமல் கடையை நோட்டமிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனால் கடைக்கு வந்த அந்த 2 பெண்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பெண்கள் ஜவுளிக்கடையில் கைவரிசை காட்டினார்களா? இல்லை வேறு யாரேனும் கைவரிசை காட்டினார்களா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story