பிறந்த நாளையொட்டி ஜெயலலிதா மணல் சிற்பத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நாகர்கோவிலில் உள்ள அவரது மணல் சிற்பத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில்,
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஜெயலலிதா மணல் சிற்பத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி ஜெயலலிதா மணல் சிற்பம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஞானசேகர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா மணல் சிற்பத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர். சிலைக்கும் அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அ.தி.மு.க. வினர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், நகர செயலாளர் சந்திரன், ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பகவதிபெருமாள் என்ற சந்தோஷ். நகர இலக்கிய அணி செயலாளர் சதானந்தன், மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் கனகராஜ், துணை செயலாளர் விக்னேஷ், வக்கீல் ஆசிக், தர்மர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story