எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி


எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2018 3:30 AM IST (Updated: 25 Feb 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன் என்று சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

ஆண்டாள் பற்றி அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அவர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதை தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன.

ஏற்கனவே இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. இது குறித்தும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே திருச்சி பாலக்கரை டாக்டர் அம்பேத்கர் பெரியார் தலித் கூட்டமைப்பு என்ற அமைப்பை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெயரில் வந்துள்ள கடிதம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story