எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர் - இலங்கை கடற்படை தளபதி குற்றச்சாட்டு
எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர் என்று இலங்கை கடற்படை தளபதி குற்றம் சாட்டினார்.
ராமேசுவரம்,
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் வடக்கு பிராந்திய கடற்படை தளபதி ஜெயந்த் டி.சில்வா நிருபர்களிடம் கூறியதாவது:-
மீன்பிடிக்க வரும் இந்திய மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் வரும்போது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் இருந்தபடியே கொடி மூலம் வர வேண்டாம் என எச்சரிக்கை செய்வார்கள்.
ஆனால் அந்த எச்சரிக்கையை மதிக்காமல் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நீண்ட தூரம் வரை வந்து மீன் பிடிக்கின்றனர். எச்சரிக்கை செய்தும் கேட்காத நேரத்தில் மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு கடற்படையினர் வந்து விடுகின்றனர். இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை கடற்படையினர் ஒரு போதும் வந்தது கிடையாது.
இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி வரும்போது தான் இந்திய மீனவர்கள் கைது செய்யப் படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவிழாவில் கலந்து கொண்ட இந்திய துணை தூதரக அதிகாரி நடராஜன் கூறியதாவது:-
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ஒரு முக்கியமான திருவிழா. இருநாட்டு மக்கள் சேர்ந்து ஒற்றுமையுடன் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருவது பெருமையாக உள்ளது.
இனம், மொழி, சாதி என வேறுபாடு இல்லாமல் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த ஆண்டு முதல் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் திருப்பலி நடைபெறுவதாக ஆயர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை சிறுவர் மற்றும் மகளிர் விவகாரத் துறை ராஜாங்க மந்திரி விஜயகலா மகேசுவரன் கூறியதாவது:-
இலங்கை அரசு மூலம் கச்சத்தீவில் புதிதாக அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டு உள்ளதுடன் திருவிழாவும் அரசு மூலம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இருநாட்டு மீனவர்களும் ஒற்றுமையாக மீன்பிடித்தொழில் செய்ய வேண்டும் என்று தான் விரும்புகிறோம்.
இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண இரு நாட்டு அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க வேண்டும்.
இந்திய மீனவர்கள் படகுகளில் தடை செய்யப்பட்ட ரோலர் வலைகளை வைத்து இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன் பிடித்துச் செல்வதால் இலங்கை கடல் பகுதியில் கடல் வளம், மீன் வளம் முழுமையாக அழிந்து வருகின்றன.
இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பது தொடர்பான விஷயத்தில் நான் தலையிட முடியாது. இது அரசாங்க ரீதியான முடிவு.

Related Tags :
Next Story