மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி,
தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில், தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2014-ம் ஆண்டு மின்சார சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தேனி வட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். வட்ட செயல் தலைவர் அழகர்சாமி, செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story