முத்தூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த 5 பேர் கைது
முத்தூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் பஸ் நிலையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முத்தூர்,
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டதை கண்டித்து முத்தூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் பஸ் நிலையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முத்தூர் புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் விவசாய முன்னணி தலைவர் பாலு தலைமை தாங்கினார். இதனைத்தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த அப்புக்குட்டி, முருகேஷ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் முத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story