தமிழ்நாடு -புதுச்சேரியில் மார்ச் 1-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
தமிழ்நாடு -புதுச்சேரியில் மார்ச் 1-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என்று வக்கீல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு,
தமிழ்நாடு வக்கீல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கூட்டு நடவடிக்கை குழு தலைவர் பி.திருமலைராஜன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எம்.ஆர்.ஆர்.சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
ஈரோடு ‘பார் அசோசியேசன்’ தலைவர் அப்புசாமி, ஈரோடு ‘அட்வகேட்ஸ் அசோசியேசன்’ தலைவர் நல்லசிவம் உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கூட்டு நடவடிக்கை குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் அப்புசாமி கூறியதாவது:-
சிவகங்கையில் அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் மீது தாக்குதல் நடத்தியதாக வக்கீல்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்த உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், உடனடியாக போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இதுதொடர்பாக வக்கீல்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற(மார்ச்) 1-ந் தேதி தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலங்களில் அனைத்து கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
தமிழ்நாட்டில் குற்றவியல் கோர்ட்டுகளில் வழக்கு நடவடிக்கை தொடர்பாக விதிகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. இதில் பல விதிகளில் மாற்றம் செய்யவும், சில விதிகள் ரத்து செய்யப்படவும் வேண்டியது உள்ளது. எனவே இதுதொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் மார்ச் 15-ந் தேதி ஐகோர்ட்டில் நடக்கிறது. எனவே தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து வக்கீல் சங்கங்களும் இதுகுறித்த தங்கள் கருத்துகளை தயார் செய்து வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அடுத்த மாதம் (மார்ச்) தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே கவுன்சில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் வக்கீல்களின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர்களை விட்டு, புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க தமிழ்நாடு வக்கீல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் உறுதி ஏற்க வேண்டும். மேற்கண்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story