தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரம்பலூர் மாவட்ட தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தினகரன் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட இளைஞரணி சார்பில் பெரம்பலூர் புனித ஜோசப்பள்ளி வளாகத்திலுள்ள முதியோர் பாதுகாப்பு இல்லத்திலும், மாவட்ட கழகம் சார்பில் செஞ்சேரியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பள்ளியிலும், மாவட்ட அம்மா பேரவை சார்பில் துறைமங்கலம் வேலா கருணை இல்லத்திலும் உள்ள ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கும் முதியோர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீமா.ரஞ்சித்குமார், கே.ஆர்.வி.விஜயராஜா, ஒன்றிய செயலாளர்கள் வீரமுத்து, பழனிவேல், சேகர், செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் கண்ணுசாமி இணை செயலாளர் கவுரி, மாவட்ட அணி செயலாளர்கள் குலோத்துங்கன், கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய தினகரன் அணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தா நாள் விழா பாடாலூரில் கொண்டாடப்பட்டது. ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து கட்சி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story