பஸ் நிலையத்தில் மூடி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை
கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை மூடி கிடக்கிறது. அதை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி,
உலக தாய்பால் ஊட்டும் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் பஸ் நிலையங்களில் இதற்காக தனி அறைகள் அமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.
அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை தமிழக அரசு நிறுவியது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலைய வளாகத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறையை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டும் வந்தது. கால போக்கில் தமிழக அரசின் இந்த திட்டத்தில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துவதை முழுமையாக நிறுத்திக்கொண்டது.
மேலும், மேற்கண்ட பாலூட்டும் தாய்மார்களின் அறையை பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்க முன்வராததால் தற்போது மாதக்கணக்கில் இந்த அறை நிரந்தரமாக மூடப்பட்டு கிடக்கிறது.
மேற்கண்ட அறையை பயன்படுத்தி கொள்ளும் நோக்கில் அங்கு பச்சிளம் குழந்தைகளோடு வரும் தாய்மார்கள் திறந்த வெளியில் பஸ்நிலைய வளாகத்தில் அமர்ந்து பாலூட்ட வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
பொது இடமான கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் தாய்மார்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறையை மீண்டும் திறந்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story