பிளாஸ்டிக் பாட்டில் கழிவறை
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு பெருகி வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு பெருகி வருகிறது. அவைகளை மாற்று வழிகளில் பயன் படுத்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு ஏராளமானோர் முயற்சித்து வரு கிறார்கள். அவர்களுள் ஒருவர் ராஷ்மி திவாரி. ஐதராபாத்தை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான இவர் பள்ளிக்குழந்தைகள் பயன்பாட்டுக்கான கழி வறையை பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு கட்டமைத்திருக்கிறார். சில்க்கூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அது அமைந்திருக்கிறது. அந்த பிளாஸ்டிக் கழிவறை குழந்தைகளை கவரும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
‘‘எனது கட்டுமானங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதுகாவலாக இருக்க வேண்டும் என்பது என் நோக்கம். அதனை மையப்படுத்தியே மலைப்பாங்கான பகுதிகளில் கட்டிடங்களை உருவாக்கி வருகிறேன். சுற்றுப்புறங்களை மாசுபடுத்துவதில் பிளாஸ்டிக் பாட்டில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவைகளை அப்புறப்படுத் துவதும் சவாலான விஷயமாக இருக்கிறது. சில்க்கூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கழிவறை வசதி இல்லை என்று கேள்விப்பட்டேன். அங்கு பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டே கழிவறையை ஏற்படுத்த தீர்மானித்தேன். ஒரு லிட்டர் அளவு கொண்ட ஒரே மாதிரியான பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க தொடங்கினோம். அவற்றுள் காற்றுப்புகாத அளவுக்கு மண் நிரப்பி கட்டுமானத்திற்கு பயன்படுத்தினோம். ஒரு கழிவறையை உருவாக்க 2000 பாட்டில்கள் தேவைப்பட்டது. பாட்டில்களில் மண் நிரப்புவதுதான் சிரமமான வேலையாகி போனது. பாட்டில்களுக்குள் காற்றுக்குமிழ்கள் இல்லாமல் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய மூன்று, நான்கு முறை பரிசோதித்தோம். செங்கல்களுக்கு பதிலாக பாட்டில்களை அடுக்கி கட்டுமானத்தை எழுப்பு வதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. சுவர் முழு வடிவம் பெறுவதற்கு நேர்த்தியாக பாட்டில்களை அடுக்கி வைக்க வேண்டி யிருந்தது’’ என்பவர் பிளாஸ்டிக் சுவர் கட்டு மானத்தின் நன் மைகளை பட்டியலிட்டார்.
‘‘செங்கலை விட பிளாஸ்டிக் பாட்டில்கள் கூடுதலாக 25 சதவீதம் வலிமையானவை. இதனை பயன்படுத்தி கட்டு மானங்களை எழுப்புவதில் பல நன்மைகளும் இருக் கின்றன. சில ஆண்டு களுக்கு பிறகு கட்டு மானத்தில் மாற்றம் செய்ய நினைத்தால் எளிதாக பாட்டில்களை வெளியே எடுத்துவிடலாம். அவைகளை மீண்டும் பயன்படுத்தவும் செய்யலாம். ஆனால் செங்கல்களை உடைத்து எடுத்தால் மீண்டும் பயன்படுத்த முடியாது. பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதால் கட்டுமானத்தின் எடை குறைவாகவே இருக்கும். கட்டுமான செலவும் குறையும். கட்டிடத்தின் ஆயுள் 70 முதல் 80 ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த கழிவறையை 10 நாட்களில் கட்டி முடித்தோம். ரூ.25 ஆயிரம் ரூபாய்தான் செலவானது’’ என்கிறார்.

Related Tags :
Next Story