ரத்ததான திருமணம்


ரத்ததான திருமணம்
x
தினத்தந்தி 25 Feb 2018 7:29 AM GMT (Updated: 25 Feb 2018 7:29 AM GMT)

திருமண விழாவில் ஆடம்பரத்தை தவிர்த்து தங்களுக்கு வரும் அன்பளிப்புகளை சமூக நலன் சார்ந்த செயல்களுக்கு செலவிட இன்றைய தலைமுறை யினர் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள்.

திருமண விழாவில் ஆடம்பரத்தை தவிர்த்து தங்களுக்கு வரும் அன்பளிப்புகளை சமூக நலன் சார்ந்த செயல்களுக்கு செலவிட இன்றைய தலைமுறை யினர் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருமண ஜோடி ஒன்று தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்த தானம் வழங்கும் முகாமாக மாற்றிவிட்டார்கள். அன்பளிப்பு வழங்குவதற்கு பதிலாக ரத்ததானம் செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்கள். அதற்கு செவி சாய்த்து 35-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்திருக்கிறார்கள். இதில் அந்த திருமண ஜோடியும் அடக்கம். அந்த புதுமணத்தம்பதிகளின் பெயர்: சந்தீப் ராய் (வயது 31) - ஸ்ரீலாமோண்டல் (25). இவர்கள் மிட்னாப்பூர் மாவட்டம் ஹேத்தல் பகுதியை சேர்ந்தவர்கள். அந்த பகுதியில் அவசர சிகிச்சையில் சேருபவர் களுக்கு போதிய ரத்தம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் தங்கள் திருமணத்தில் ரத்ததானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

‘‘ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் தொடங்கும் சமயத்தில் எங்கள் பகுதியில் அறுவை சிகிச்சை செய்பவர் களுக்கு ரத்தம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. அதனால் எனது திருமணத்தில் ரத்த தானம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். நண்பர்கள், உறவினர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அவர்களும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதையடுத்து திருமண அழைப்பிதழில் அன்பளிப்புக்கு பதிலாக ரத்ததானம் செய்யுங்கள் என்ற கோரிக்கையை பதிவு செய்தேன். அதற்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிறார் சந்தீப் ராய்.

கொல்கத்தாவை சேர்ந்த ரத்ததான வங்கி நிர்வாகியான ஆதீஷ் கூறுகையில், ‘‘இது வரவேற்கத் தகுந்த விஷயம். இந்த ஜோடி ரத்த தானம் வழங்குவது பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்தும் விஷயத்தில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்கள். நிச்சயமாக இது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் தங்கள் திரு மணங்களில் ரத்ததானத்திற்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்’’ என்கிறார்.

2017-ம் ஆண்டு உஜ்ஜயினியை சேர்ந்த டாக்டர் குஞ்ஜன் ஜெயின் - ஓஸ்ஹின் ஜோடி தங்கள் திருமண விழாவில் ரத்ததான முகாம் நடத்தினார்கள். இதேபோல் 2013-ம் ஆண்டு ஒடிசாவை சேர்ந்த சுவேந்த் குமார் - சுசீத்ரா ஜோடியும் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரத்த தானம் செய்தனர்.

Next Story