வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய்-மகன் மீது மயக்க ‘ஸ்பிரே’ அடித்து 7 பவுன் நகை, வெள்ளி திருட்டு


வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய்-மகன் மீது மயக்க ‘ஸ்பிரே’ அடித்து 7 பவுன் நகை, வெள்ளி திருட்டு
x
தினத்தந்தி 26 Feb 2018 3:30 AM IST (Updated: 25 Feb 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய்-மகன் மீது மயக்க ‘ஸ்பிரே’ அடித்து, 7 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை,

பொன்னேரி அருகே உள்ள ஆலாடு ஊராட்சிக்கு உட்பட்ட பி.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 35). விவசாயியான இவர், தனது தாயார் அமராவதி(70) உடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு தாய்-மகன் இருவரும் சாப்பிட்டனர். பின்னர் வீட்டை பூட்டி விட்டு, வீட்டின் உல்ளே வரண்டாவில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பாபு மற்றும் அவரது தாயார் அமராவதி முகத்தில் மயக்க ‘ஸ்பிரே’ அடித்தனர். இதில் இருவரும் மயக்கம் அடைந்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் தாய்-மகன் இருவரும் தூங்கிக்கொண்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர், அவர்களை தட்டி எழுப்பினர். அப்போது பூட்டிய வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது நகை, வெள்ளி பொருட் கள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. அதன்பிறகுதான் மர்மநபர்கள், தங்கள் மீது மயக்க ‘ஸ்பிரே’ அடித்து, திருட்டில் ஈடுபட்டுள்ளது அவர்களுக்கு தெரிய வந்தது.

இதுபற்றி பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story