ஜவுளிக்கடை உரிமையாளர் பலி


ஜவுளிக்கடை உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 26 Feb 2018 4:00 AM IST (Updated: 26 Feb 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் பலியானார்.

தென்காசி,

தென்காசி மற்றும் செங்கோட்டையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் ஆர்.பி.நாயகம் என்ற சுதன் (வயது 39). இவரது வீடு செங்கோட்டையில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஆர்.பி.நாயகம் தென்காசியில் இருந்து செங்கோட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

தென்காசி-இலஞ்சி ரோட்டில் உள்ள ஒரு கியாஸ் பங்க் முன்பு சென்றபோது, எதிரே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆர்.பி.நாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மீது லாரி மோதிய விபத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story