தொழில் அதிபர் வீட்டில் திருடிய வேலைக்கார பெண்கள் 2 பேர் கைது


தொழில் அதிபர் வீட்டில் திருடிய வேலைக்கார பெண்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2018 10:15 PM GMT (Updated: 25 Feb 2018 9:07 PM GMT)

கரூரில் தொழில் அதிபர் வீட்டில் திருடிய வேலைக்கார பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

கரூர்,

கரூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் திவாகர்(வயது 30). தொழில் அதிபரான இவரது வீட்டில் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்த கனகராஜின் மனைவி கோமதி (40), வெள்ளியணையை சேர்ந்த சக்திவேலின் மனைவி மகேஸ்வரி(40) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் திவாகர் வீட்டில் நகை மற்றும் பொருட்கள் அவ்வப்போது திருடு போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் வேலை செய்யும் 2 பெண்கள் மீது சந்தேகமடைந்தார். இதையடுத்து 2 பேரையும் கையும் களவுமாக பிடிக்க வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை திவாகர் பொருத்தினார்.

2 பேர் கைது

சம்பவத்தன்று வீட்டில் நகையை 2 பேரும் திருடும் போது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதையடுத்து கோமதி, மற்றும் மகேஸ்வரி ஆகிய 2 பேரையும் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் 2 பேரும் தங்க நகைகளை அவ்வப்போது திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கோமதி, மகேஸ்வரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 

Next Story