மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 368 பேர் எழுத உள்ளனர் + "||" + There are 11 thousand 368 people in the Karur district in the Plus II Commonweight

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 368 பேர் எழுத உள்ளனர்

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 368 பேர் எழுத உள்ளனர்
கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 368 பேர் எழுத உள்ளனர். வினாத்தாள் மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி தொடங்குகிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி துறை மற்றும் தேர்வு துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டுகள் அந்தந்த பள்ளிகளில் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுகளுக்கு முன்பாக செய்முறை தேர்வுகள் கடந்த 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடந்து முடிந்தன. தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

தேர்வு குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் மொத்தம் 38 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மாணவ- மாணவிகள் மொத்தம் 11 ஆயிரத்து 368 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதுதவிர தனித்தேர்வர்கள் தனியாக எழுத உள்ளனர். தேர்வுக்கான விடைத்தாள்கள் ஏற்கனவே வந்து விட்டன. விடைத்தாள்கள் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வினாத்தாள்கள் கரூர் வந்து சேர்ந்தன. கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் பலத்த பாதுகாப்பாக வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ளது” என்றார். வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.