37 அடி உயர வெட்காளி அம்மனுக்கு கும்பாபிஷேகம்


37 அடி உயர வெட்காளி அம்மனுக்கு கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 25 Feb 2018 10:15 PM GMT (Updated: 25 Feb 2018 9:31 PM GMT)

விக்கிரவாண்டி அருகே 37 அடி உயரமுள்ள வெட்காளி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே வா.பகண்டையில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்திலேயே 37 அடி உயரத்தில் வெட்காளி அம்மன் சிலையை நிறுவ கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி பக்தர்களிடம் நன்கொடை வசூலித்து பல லட்சம் ரூபாய் செலவில் 37 அடி உயரத்தில் வெட்காளி அம்மன் சிலை நிறுவப்பட்டது.

இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

நேற்று காலை 9.10 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டது. பின்னர் 37 அடி உயரமுள்ள வெட்காளி அம்மன் சிலை மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பாலமுருகன் சிலைக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது.

பின்னர் அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story